08.01.2014, விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் மூலம், மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் நிதி ஒதுக்கீட்டுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 18 வயது முதல் 60 வயது வரை உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மிக குறைந்த அளவிலான 4 விழுக்காடு வட்டியில் சுய தொழில் வங்கிக் கடன் வழங்கப் படுகிறது. வங்கி கடன் பெற்ற மாற்றுத் திறனாளிகள், தொகையினை முறையாக செலுத்தும்பட்சத்தில், அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியினை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வழங்கிகள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டிதொகை இல்லாமல், சுய தொழில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கி கடனுதவி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கும், வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி கடனுதவியை பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment