20.01.2015, தூத்துக்குடி :
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு மல்டி மீடியா, டிஜிட்டல் போட்டாகிராபி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் சார்பில் மாற்றுதிறனாளிகளான, கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைந்தவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 16 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி பெறும் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாத பயிற்சி வழங்கப்படும். விடுதி வசதி தேவைப்படுபவர்கள் விடுதி வசதி வழங்கப்படும். பயிற்சியின் போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன., 23 க்குள், நேரில் சென்று கல்வித்தகுதி, மற்றும் சான்றுகளுடன் விண்ணப்பம் செய்யலாம், என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment