FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 20, 2015

சேலம் கலெக்டர் ஆஃபீஸில் காது கேளாதோருக்கு பரிசோதனை மையம்

20.01.2015, சேலம்: 
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், காது கேளாதோருக்கான சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் கூறினர்.
சேலம், கலெக்டர் அலுவலகத்தின், தரைத்தளத்தில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு அலுவலகம் உள்ளது. நாள்தோறும், நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், பல்வேறு சலுகைகளை பெற, இந்த அலுவலகத்தை நாடி வருகின்றனர். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ், காதொலி கருவி, தையல் இயந்திரம், செயற்கை கால் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட காது கேளாதோர் பரிசோதனை மையம், தற்போது, சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 5.10 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்ட பின், மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். சேலம் உள்பட, 15 மாவட்டங்களில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கென சிறப்பு வாகனம் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள அலுவலர்கள், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காது கேளாதோர் குறித்த விவரங்களை சேகரிப்பர். காது கேளாதோராக இருந்தால், அவர்களை, கலெக்டர் அலுவலகம் அழைத்து வருவர்.
பரிசோதனை செய்த பின், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு பரிசோதனை மையம், மிகுந்த பாதுகாப்புடன், குளிரூட்டும் சாதனத்துடன், வெளிசப்தம் உள்ளே நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை முடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். ஓரிரு வாரங்களில், இப்பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாற்றுத்திறனாளி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment