FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 6, 2015

DEAF பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவகுழு பரிசோதனைக்கு கோரிக்கை

05.01.2015, கிருஷ்ணகிரி: 
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கீழ்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த, வீரபத்ரப்பா என்ற விவசாயியின், வாய் பேச இயலாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகளை, கடந்த மாதம் 25ம் தேதி, வாலிபர்கள் நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு, சிறப்பு மருத்துவக்குழு அமைத்து, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். சைகை மொழி தெரிந்த ஒரு பெண் அதிகாரியை உள்ளடக்கிய சிறப்புக்குழு மூலம் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்டமுகிலாளம் சாலையில் இருந்து, கொடகரை செல்லும் 13 கிலோ மீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி, போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்.சிறுமியர் பாதிப்புக்கு ஆளாகும் மலை பகுதிகளை கொண்ட அஞ்செட்டியில், அரசின் சார்பில், பழங்குடியினர் நலத்துறை மூலம் உடனடியாக ஒரு உண்டு உறைவிடப்பள்ளியை துவங்க வேண்டும். அஞ்செட்டி பகுதியில் தொடர்ந்து சிறார்களுக்கு எதிராக நடந்து வரும் குற்ற செயல்களை தடுக்கவும், சமூக பொருளாதார நிலையில் மாற்றம் காணவும் சிறப்பு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment