29.01.2015, விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப் படுகிறது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2014-15ம் ஆண்டிற்கான ஒரு மாத பல்லூடக பயிற்சி மற்றும் இலக்க புகைப்பட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி, கை- கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய 200 மாற்றுத்திறனாளிகளுக்கு, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள பயிற்சியில் பங்கு பெற, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 40 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், கல்விச் சான்று நகல் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், மொபைல்போன் எண் இணைத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.,2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை விழுப்புரம் கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment