FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 30, 2015

தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி


சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research Institute-ல் காலியாக உள்ள குரூப் 'C' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 1/2015

பணி: Junior Stenographer Group-C
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (General) Grade-III
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant (Finance & Accounts) Grade-III
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (Stores &Purchase) Grade -III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவதொரு கிளையில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். செலுத்திய பிறகு அதற்குரிய இ-ரசீது பெற்றுக் கொள்ளவும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Controller of Administration, CSIR-Central Leather Research Institute, Sadar Patel Road, Adyar, Chennai - 600020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Click here

No comments:

Post a Comment