31.12.2014, ஓசூர்:
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, மாற்றுத்திறனாளி சிறுமியை, நான்கு வாலிபர்கள், பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்ய போலீசார் முதலில் மறுத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வழக்கு பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த, கீழ்கொச்சாவூரை சேர்ந்தவர் விவசாயி வீரபத்திரப்பா. இவருக்கு, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத, 16 வயது மாற்றுத்திறனாளி மகள் உள்ளார். கடந்த, 25ம் தேதி மாலை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில், அறுவடை செய்த ராகி பயிறுக்கு, வீரபத்திரப்பா காவல் இருந்தார். அவருக்கு உணவு வழங்கி விட்டு, அவரது மகள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த கீழ்கொச்சாவூரை சேர்ந்த, வீரபத்திரன் மகன் முத்தப்பா, 26, மேல்கொச்சாவூரை சேர்ந்த பசப்பா மகன் மாதப்பா, 22, அதே பகுதியை சேர்ந்த மாதப்பா மகன் ருத்ரப்பா, 22, பசப்பா மகன் சித்தலிங்கா, 23, ஆகிய நான்கு பேரும், சிறுமியின் கையை பிடித்து இழுத்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமியின் தலையில், வாலிபர்கள் கட்டையால் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். அவரை, நான்கு பேரும், அருகில் உள்ள காட்டிற்குள் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், கொலை செய்து விடுதாக மிரட்டியுள்ளனர். இதற்கு பயந்த சிறுமி, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவில்லை. கடந்த, 26ம் தேதி காலை, சிறுமியின் உடையில் அதிகளவு ரத்தம் இருந்ததை கவனித்த அவரது பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். ஆனால், சிறுமி சொல்வதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையறிந்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவர் சியாமளா, சிறுமியிடம் பேசி நடந்ததை அறிந்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து, சிறுமியின் தந்தை வீரபத்திரப்பா, அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஆனால், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யுமாறு கூறி, அஞ்செட்டி போலீசார், அவரை திருப்பி அனுப்பி விட்டனர். தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸில் புகார் செய்தபோது, அவர்கள் முதலில் புகாரை ஏற்க மறுத்தனர். ஆனால், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தலையிட்டதால், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். நான்கு பேர் கொண்ட கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாற்றத்திறனாளி சிறுமிக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment