FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, May 26, 2015

குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்


சென்னை, 26 May 2015
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் 1241 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 26-இல் எழுத்து தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளன. இதன்படி, ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், குரூப் 2 விண்ணப்பித்ததற்கான சான்று, வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றுடன் சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கிண்டி சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் மே 29-க்குள் நேரில் தொடர்புகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment