FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, May 22, 2015

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம் 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை


கோவை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன் கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். எதிர்காலத்தில் வங்கி பணிக்கு செல்வதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநில அளவில் முதலிடம்

காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பாடம் கிடையாது. தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன்கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-88, கணிதம்-97, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை, பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி, ஆசிரியை சசிகலா ஆகியோர் பாராட்டினார்கள். மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் மகனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

வங்கி பணிக்கு ஆர்வம்

மாணவர் மிதுன் கிருஷ்ணா ஆசிரியை சசிகலாவின் மொழிபெயர்ப்பு உதவியுடன் கூறியதாவது:-

மாநில அளவில் இந்த சாதனையை படைப்பதற்கு காரணம் எனது தலைமை ஆசிரியை அமிர்த வல்லி, வகுப்பு ஆசிரியை சசிகலா ஆகியோர் தான். பாடங்களை மிகவும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தனர். அதிலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில் பி.காம் படித்து, வங்கிப்பணியில் சேர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சாதிக்க முடியும்.

இவ்வாறு மாணவர் மிதுன் கிருஷ்ணா கூறினார்.

மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் கூறும்போது, குழந்தையாக இருக்கும் போதே மிதுன்கிருஷ்ணாவுக்கு காது கேட்காது. இருந்தாலும் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்வான். அறிவாற்றலுடன் காணப்பட்ட எனது மகன் எதிர்காலத்தில் நிச்சயம் சாதனை படைப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. மாநில அளவில் மிதுன் கிருஷ்ணா சாதனை படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

மேலும் 2 பேர் சாதனை

கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் காது கேளாதோர் பள்ளி மாணவர் எம்.பிரவீன்குமார் 361 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 8-வது இடத்தை பிடித் துள்ளார். 90.2 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில சாதனை படைத்த மாணவர் பிரவீன்குமாரை, பள்ளி முதல்வர் சந்தரகாந்தி பாராட்டினார்.

கோவை கஸ்தூரிபா காந்தி பள்ளி மாணவி ஆயிஷாசித்திகா, மாநில அளவில் 10-வது இடத்தை பெற் றுள்ளார். இவர் 357 மதிப்பெண் எடுத்துள்ளார். கோவை பீளமேடு ஹோப்கல்லூரி பகுதியை சேர்ந்த இந்த மாணவியின் தாய் பல்கீஸ் பேகம் தனியார் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

மாணவி ஆயிஷா சித்திகா கூறும்போது, ‘மாநில அளவில் 10-வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் தையல் கலை படித்து, ஆடை அலங்கார வடிவமைப்பு பிரிவில் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.

காதுகேளாதோர் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து இருப் பதற்கு கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-Daily Thanthi

No comments:

Post a Comment