FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, May 24, 2015

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை : எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்காலம்

22.05.2015 ஊட்டி: 
ஊட்டியில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித் துறையின் ஒத்துழைப்பு அவசியமாகி உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. துவக்கத்தில், அதிகளவு மாணவர் எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய 'ஈகோ' பிரச்னையால் மதிப்பிழந்தது.இருப்பினும், இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மீண் டும், சிறப்பான முறையில் செயல்பட துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, தேர்வெழுதிய ஐந்து மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு தேர்வெழுதியஐந்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளியின் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் சுப்ரமணி என்பவரது மகன் சேதுபதி அதிகபட்சம், 273 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒத்துழைக்குமா கல்வித் துறைதற்போது, இப்பள்ளியில், 18 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ, மாணவியருக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி வரும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர்.'ஊட்டி வட்டத்தில் மட்டும், 27 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர்' என, கல்வித் துறை கணக்கு காட்டியுள்ளது. எனவே, தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரை இப்பள்ளியில் இணைப்பதன், பள்ளியின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது.

இலவச கல்வியுடன் விடுதி...

பள்ளி தலைமையாசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பாண்டு, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மூன்று வயதிற்கு மேல் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவர். உணவு, சீருடை, நோட்டு புத்தகம், செவித் துணை கருவி மற்றும் தங்கு விடுதியில் வசதியாக தங்க இடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0423 -2450700, 94875-55948 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment