FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, May 25, 2015

ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு அதிகாரிகள் அலட்சியம்

திருச்சி: திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை கட்டணம் பெற அலை கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 17 லட்சம் முதல் 24 லட்சம் வரை மாற்றுதிறனாளிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கிறது. தமிழக அரசின் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் பரிசோதித்து அதன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரயிலில் சலுகை கட்டணம் பெறவும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் ரூ.1000த்தில் ரூ.500 மத்திய அரசின் பங்களிப்பாக உள்ளது. ரயில்வே துறை வழங்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா பெட்டிகளில் 75 சதவீதமும், ஏசி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை உடன் செல்லும் ஒருவருக்கு பொருந்தும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் பெறுவதில் சிரமம் உள்ளதால் எங்களுக்கும் இணையதளத்தில் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் நிர்வாகத்திற்கு கோாிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிா்வா கம் ஸ்மாா்ட் காா்டு சிஸ்டத்தை மாற்றுதிறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. மாற்றுதிறனாளிகளுக்கான ஸ்மாா்ட் காா்டு பெற மத்திய அரசு அறிவித்துள்ள ஆவணங்களுடன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் ஜங்ஷனில் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனா். இதனால் திருச்சி ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பல கிலோ மீட்டா் அலைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. அங்கு நிலைய வணிக வளாகத்தின் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கின்றனர். அங்கு பணியில் உள்ள அலுவலர்கள் பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அலை கழிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

போராட திட்டம்
இது குறித்து மாற்றுதிறனாளிகள் சங்க தலைவா் தீபக் கூறும் போது, ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ள மருத்துவ மற்றும் வயது சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் போட்டோ ஆகியவற்று டன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி அனுப்பி விடுகின்றனா். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் என்னைப் போன்றவர்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இது போன்ற நிகழ்வு தொடருமேயானால் போராட்டங்கள் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. திருச்சி கோட்டம் மட்டுமில்லை அனைத்து ரயில் நிலையங்களிலும் இது போன்றுதான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மாடியில் அலுவலகம் படியில் தவழும் அவலம்...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வணிக வளாக மாடியில் உள்ளது. அங்கு நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மாடிப்படியில் தவழ்ந்து சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஐநா உாிமை உடன் படிக்கையை மீறி மாடிப்பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரை தளத்தில் இயங்க வேண்டும் என்பதே மாற்றுதிறனாளிகளின் கோாிக்கையாக உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாடியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை கீழ்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் 30 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

No comments:

Post a Comment