சென்னை, மே 8: 67 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 4 கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன்ரூ.26.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (07.07.2015), சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள சுகாதாரத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு 67 பார்வையற்ற, காது கேளாத மற்றும் வாய் பேசாத, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25.5 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி கா சோலைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் 4 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான திருமண நிதியுதவி காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை கலெக்டர் எ.சுந்தரவல்லி மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்
சக்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் சின்னையா (எ) ஆறுமுகம், டி.சிவராஜ், நுங்கை மாறன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜாஸ்மின், மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஆர்.ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Manikandan
ReplyDelete9902028108
Dharmapuri
Deaf