FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, May 9, 2015

Standards of Hearing Impaired schools to be improved

  • There are 2 Govt Hr Sec Special schools for hearing impaired are run by the govt in the state. One is at Dharmapuri & another at Thanjavur.
  • In the recent +2 results, in Dharmapuri out of 30 HI children, only 14 have passed out. In Thanjavur out of 20 children, only 6 have passed out.
  • Certainly there are some improvement in these schools comparing to last year. In Thanjavur all the 22 candidates have failed last year & In Dharmapuri out of 24 children only 22 have passed. This has happened beacause of the infrastructure and irresponsible teachers. 
  • TARATDAC has conducted struggles last year & the collectors of these districts have assured to improve the standards. & Because of this there are some improvements this year.
  • At the same time the intervention of the disab welfare dept & state administrations is direly needed.
  • NO SIGN LANGUAGE TEACHERS in these schools. The training for the teachers have given by a Chennai based NGO run school in the past. This training has not recognised by the Rehabilitation Council of India-RCI, which is against the law.
  • According to teachers, there were trained to teach the children only by lip moment not by sign language.. They say, this is big hurdle to them.
  • In this regard TARATDAC has sent a letter to the CM & Disab welfare officials to intervene to improvise the standards.

மாண்புமிகு திரு. டீ. பன்னீர்செல்வம் அவர்கள் 09.05.2015
தமிழ்நாடு முதலமைச்சர்,
சென்னை-9.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு. . . வணக்கம்.

பொருள்: அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை

நடந்து முடிந்துள்ள +2 தேர்வுகளில் தருமபுரி மற்றும் தஞ்சாவூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட முன்னேற்றம் உள்ளபோதிலும், மொத்தத்தில் 50 சதவீத விழுக்காடுகூட தேர்ச்சிபெறவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் இப்பள்ளிகளில் கடந்த ஆண்டில் தஞ்சாவூர் பள்ளியில் தேர்வு எழுதிய 22 மாணவ மாணவிகளும், தருமபுரி பள்ளியில் தேர்வு எழுதிய 24 பேரில் 2 பேரை தவிர 22 பேரும் தோல்வியடைந்தது மாற்றுத்திறனாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பள்ளிகளின் நிர்வாக செயல்பாடுகள், ஆசிரியர்களின் ஈடுபட்டுடன்கூடய வேலை தன்மை குறித்து பல புகார்கள் வந்ததை அடுத்து, எமது சங்கம் போராட்டங்களை நடத்தியது. இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பலனாக இந்தாண்டு +2 தேர்வுகளில் தருமபுரியில் தேர்வு எழுதிய 30 மாணவ-மாணவிகளில் 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை காதுகேளாதோர் பள்ளியில் தேர்வு எழுதிய 20 பேரில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட முன்னேற்றமாகும்.

செய்கைமொழி தெரியாத ஆசிரியர்கள்
அரசு காதுகேளாதோர் சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிர்யர்களுக்கு செய்கைமொழி பயிற்சி இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, மொழியால் கற்றுக்கொடுக்க கூடாது என்ற பயிற்சியும், வாய் அசைவால் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளதால் இப்படிப்பட்ட நிலைமை உள்ளதாக அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். மற்ற மாநிலங்களில் அப்படிப்பட்ட நிலைமை இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும். இப்பள்ளிகளில் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் பள்ளியில் சேர்க்க வேண்டிய வயதையும் தாண்டி காலம் கடந்து சேர்க்கப்படுவதால் வாய் அசைவால் பயிற்சி அளிக்க முடிவதில்லை என்ற குறையும் உள்ளது. சென்னையில் உள்ள தனியார் தொண்டுநிறுவன பள்ளி மூலம் அளிக்கப்பட்ட அந்த பயிற்சியை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஆசிரியர்களுஙக்கான அந்த பயிற்சி சட்டப்படியான இந்திய மறுவாழ்வு மன்றத்தின் அங்கீரம் இல்லாமல் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, காதுகேளாத வாய்பேச முடியாத குழந்தைகள் உரிய கல்வி கற்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சரும் மாற்றுத்திறனாளி நலத்துறையும் எடுக்க கோருகிறோம்.
நன்றியுடன்...
பா. ஜான்சிராணி, மாநில தலைவர்
எஸ்,.நம்புறாஜன், மாநில செயலாளர்

Click here
Standards of Hearing Impaired schools to be improved

No comments:

Post a Comment