மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப மத்திய அரசு புதிய செயல்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிகளை இதுவரை தொடங்காத துறையி
னர், அந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment