FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 27, 2015

மனைவி, 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை கொன்று விவசாயி தற்கொலை!

திண்டுக்கல்: மனைவி மற்றும் தனது 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாரிசிலம்பு ஊராட்சிக்குட்பட்டது மார்க்கன்டபுரம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி (42) என்ற மனைவியும், தேன்மொழி(16), வசந்தி(14) என்ற மகள்களும், வசந்த குமார்(12) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் தனது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களுக்கு  இறுதி சடங்குகள் செய்துள்ளார். பின்னர் முருகேசனும், மனைவி கிருஷ்ணவேணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். வழக்கம் போல் இன்று காலை முருகேசனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த ஆட்கள், நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவரது உறவினர் கூறும் போது, முருகேசனின் 3 பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் நீண்ட நாட்களாக  மனஉளைச்சலில் இருந்த முருகேசன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment