12.05.2015, தர்மபுரி:
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு முகாம், இன்று (மே, 12) முதல், வரும், 22ம் தேதி வரை நடக்கிறது' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு வயது வரையுள்ள, செவித்திறன் குறைபாடுடைய இளம் குழந்தைகளைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை அல்லது நவீன காதொலிக் கருவிகள் பொருத்தி, பேச்சுப் பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாம், இன்று (மே, 12) பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நாளை (மே, 13), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ம் தேதி மொரப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடக்கும். இதே போன்று, 22ம் தேதி, தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment