27.09.2015, சாஸ்திரி நகர்:
உலக காது கேளாதோர் தினத்தையொட்டி, சாஸ்திரி நகர், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளியில், நேற்று, உலக காதுகேளாதோர் தின விழா கொண்டாடப்பட்டது.
தற்போது பயிலும், காதுகேளாத குழந்தைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வரைந்த ஓவியம், கலை வண்ண பொருட்கள், பாடம் கற்பிக்கும் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், பிறந்து 45 நாளில் இருந்து 3 வயது வரை உள்ள காதுகேளாத குழந்தைகளே சேர்க்கப்படுகின்றனர். அங்கு, செய்கை மொழியில் பாடம் நடத்துவதில்லை. வாயால் பேச வைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், பொது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.