FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Sunday, September 27, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் 25 பவுன் நகை திருட்டு

திண்டுக்கல், 26 September 2015
மாற்றுத் திறனாளி பெண்ணை ஏமாற்றி, நூதன முறையில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற இளம் பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஆர்எம்காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமாரி(40). இவரது சகோதரி உமா. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இந்நிலையில், சகோதரி உமாவை வீட்டில் வைத்துவிட்டு, செல்வக்குமாரி வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டாராம்.

அப்போது, ரீட்டா(30) என்ற இளம் பெண் செல்வக்குமாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதேபகுதியில் குடியிருந்த ரீட்டா, கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கெனவே பழகியவர் என்பதால், ரீட்டாவை வரவேற்ற உமா, அவருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீர் குடித்த பின்பு, உடை சரி செய்ய வேண்டும் என ரீட்டா தெரிவித்தாராம்.

வீட்டிலிருந்த மற்றொரு அறையை உமா காட்டியுள்ளார். அங்கு சென்ற ரீட்டா பீரோவிலிருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியேறிவிட்டாராம். வெளியே சென்றிருந்த செல்வக்குமாரி வீட்டிற்கு திரும்பிய போது, பீரோவிலிருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து செல்வக்குமாரி அளித்த புகாரின்பேரில், திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment