FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, September 28, 2015

தாட்கோ கடன் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் கடன் பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலத்தை மேம்படுத்தும் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்கும் திட்டங்களுக்கு தாட்கோ கடன் வழங்கப்படுகிறது. மருத்துவமனை, முடநீக்க மையம், ரத்த பரிசோதனை மையம் அமைக்க எம்.பி.பி.எஸ்., பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ்.,பி.பி.டி., பி.பாம், டி.பாம்., லேப் டெக்னீசியன், பாரா மெடிக்கல் சென்டர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி, பொருளாதார கடன் வழங்கப்படும்.

இருபாலரும், ஆண்கள் சுய உதவி குழு, மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழு, திருநங்கைகள் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். இந்திய குடிமைப்பணி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்க்கும் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் இணைய தளமுகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோர் வசதிக்காக தாட்கோ அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment