தஞ்சாவூர், 21 September 2015
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படித்த மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்குவதற்காக நடைபெறும் முகாம்களில் தகுதியுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 - 45 வயது வரை உள்ள உடலியக்க குறைபாடு உடையோர், பார்வையற்றோர் மற்றும் காது கேளாத, வாய் பேசாத படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அவர்களின் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்க தமிழக அரசு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையத்தால் 3 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனை மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வரும் 22-ஆம் தேதியும், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரும் 29-ஆம் தேதியும், கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் முகாம் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791, மாவட்ட தொழில் மையம் தொலைபேசி எண் 04362-255318 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment