FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, September 28, 2015

புதுவை கடற்கரையில் காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

28.09.2015, புதுச்சேரி,
உலக காதுகேளாதோர் தினத்தையொட்டி புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் புதுவை கடற்கரையில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும், புதுவையில் உள்ள காதுகேளாதோர் மாணவர்கள் உயர்கல்வி பயில ஒரு கல்லூரியிலாவது பி.காம் அல்லது பி.எஸ்சி வகுப்புகள் தொடங்க வேண்டும், அதேபோல் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊர்வலத்திற்கு சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன், பாலமோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment