FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, September 19, 2015

தாட்கோ திட்டங்கள் மூலம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

 
சென்னை : 15 September 2015
தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்களிலிருந்து கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம் வாங்க, தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்க, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருந்துக்கடை, மருத்துவமனை, இரத்த பரிசோதனை நிலையம் அமைக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, சுழல் நிதி, ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, மகளிர் மற்றும் ஆண்கள் கலப்பு சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, இந்திய குடிமைப்பணி (ஐஏஎஸ்), முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல்நிலைத் தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவர்கள் என்ற http://application.tahdco.com இணையதள முகவரிக்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20/- செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment