11.09.2015, ராமநாதபுரம்: ஐஏஎஸ் தேர்விற்கான பயிற்சி மைய நுழைவுத்தேர்விற்கு அக்டோபர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில், இந்திய குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்க வரும் நவம்பர் 22ல் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் செப்டம்பர் 6 முதல் வழங்கப்படுகிறது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2016 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 32 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஆகியோர் 35 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் 37 வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்தில் சேர தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பாண்டிச்சேரி உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களைப் பெற எழுத்துப்பூர்வமான மனுவுடன் கல்வி, வயது, இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கடைசி நாளான வரும் அக்டோபர் 6 மாலை 5.45 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment