02.09.2015, புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்றுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற உத்தரவை மத்திய அரசு முறையாக செயல்படுத்துவதில்லை என தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் ரன்ஜன் கோகாய், என்.வி.ரமணா நேற்று அளித்த தீர்ப்பில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி வரும் பிப்ரவரிக்குள் முடிவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். எனவே, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்பதை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தீர்ப்பளித்தனர்.
No comments:
Post a Comment