29 September 2015
அதிகம் படிக்காத மற்றும் பொருள் இல்லாத இளைஞர்களையும், இல்லத்தரசிகளையும் தொழில் முனைவோர்களாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனம்.மாணவ, மாணவிகளிடையே தொழில் முனையும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பாடத் திட்டங்கள் மூலம் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், கடந்த 2004-ம் ஆண்டு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐ.இ.சி.டி) தொடங்கப்பட்டது.
100-க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சிகளை உருவாக்கி, சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குப் பணி வாய்ப்பு வழங்க உதவியுள்ள ஐ.இ.சி.டி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ. பார்த்தசாரதியுடன் உரையாடியது :
""ஒருவர் பணி வாய்ப்புப் பெற வேண்டும், தொழில்முனைவோராக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் தான் இந்நிறுவனத்தின் பயிற்சி சேர்க்கைக்கான முதல் தகுதி. அவரவர் விருப்பத்துக்கேற்ற திறன் மற்றும் அறிவை வளர்த்து, அவர்களைச் சொந்தக் காலில் நிற்கச் செய்வதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கம்.
அடிப்படைக் கணினிப் பயிற்சி, தொடர்புத் திறன் பயிற்சி, மென்திறன் பயிற்சி, தொலைபேசியைக் கையாளுதல் பயிற்சி, சந்தையியல் பயிற்சி, மல்டி மீடியா என பல்வேறு சான்றிதழ் படிப்புகளும், பட்டய மற்றும் பெரும் பட்டயப் படிப்புகளும் (அட்வான்ஸ்டு டிப்ளமோ) இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புக்கேற்ற புதிய படிப்புகளை அவ்வப்போது வகுத்து, அதற்கான பாடத்திட்டங்களை முறைப்படுத்தி கல்வியும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்கள், தங்களின் எதிர்காலத் தொழில் திட்டம் குறித்து தானே திட்டம் தயாரிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
மேலும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மூலம் கடன் கிடைக்கவும், வங்கிக் கடன் கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டுக்குள்பட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்களில், கல்லூரிக்கு 100 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, அவர்களின் சுயதொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இதில், மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்புப் பெற்றுத் தரும் நடவடிக்கைகள் பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பயிற்சியைப் பெற விரும்புவோர், பயிற்சி நேரம் மாலை 6 மணிக்கு வேண்டும் எனக் கோரினால் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கோரினாலும் அதற்கேற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வம் கொண்ட 20 முதல் 30 பேர் ஒரு குழுவில் இருந்தால் போதும். அவர்கள் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
தொலைவு காரணமாக இங்கு வந்து பயிற்சி பெற முடியாத மாணவ, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் பயிற்சி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், 34 நிறுவனங்களுடன் கல்வி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, ஐ.இ.சி.டி பாடத்திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு கல்லூரி மாதிரி மையமாகத் தேர்வு செய்யப்பட்டு அந்தக் கல்லூரி மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதிரி மையங்கள் மூலம் இதுவரை சுமார் 3,241 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மற்றும் திருச்சி ஆகிய 2 மாவட்டங்களில் மாவட்ட வாழ்க்கை வழிகாட்டி மற்றும் ஆலோசனை மையம் மூலம் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளி - பல்கலைக்கழகம் - தொழில் நிறுவனங்கள் இணைப்புத் திட்டம் (நமஐபந) என்ற திட்டம் 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பள்ளிக் கல்வியின் போதே குழந்தைகளுக்குத் தொழில் திறன் குறித்த புரிதல், அடிப்படை கணினிப் பயிற்சி அளிக்கும் இத்திட்டம் மூலம் இதுவரை சுமார் 1.37 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

கிராமப்புற இளைஞர்கள், படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள், படித்து பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், இல்லதரசிகள், மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் தொழிற்பயிற்சியும், சான்றிதழ் படிப்பையும் பயிற்றுவிக்கும் இந்த நிறுவனம் மூலம் இதுவரை சுமார் 1.93 லட்சத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.
தொழில் முனைதல் மற்றும் திறன் மேம்பாடு மையத்தை ஐ.இ.சி.டி- மூலம் அமைக்க தமிழக அரசின் உயர்கல்வித் துறை கடந்த 2012-ம் ஆண்டில் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்ததும், மத்திய அரசின் குறு மற்றும் சிறு தொழில் அமைச்சகம் ஆர்.ஜி.யு.எம்.ஒய் திட்டத்தின் கீழ் இந்நிறுவனத்தை அங்கீகரித்ததும் ஐ.இ.சி.டி-யின் தொழில் பயிற்சி பணிகளுக்கு ஓர் சான்று'' என்றார் கோ. பார்த்தசாரதி.
No comments:
Post a Comment