FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, September 14, 2015

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணி

திருச்சி 'பெல்' நிறுவனத்தில் பிட்டர், வெல்டர் பணியிடங்களுக்கு 200 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம்வகுப்பு தேர்ச்சியுடன், பணிசார்ந்த பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. மின்உற்பத்தி, மின்பகிர்மானம், புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றலை பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட, இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது திருச்சியில் இயங்கும் பெல் நிறுவனத்தில் பிட்டர், வெல்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 200 பணியிடங்கள் உள்ளன. இதில் பிட்டர் பணிக்கு 150 பேரும், வெல்டர் பணிக்கு 50 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 106 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 54 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 38 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 2 இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

கல்வித் தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பிட்டர், வெல்டர் போன்ற பிரிவில் என்.ஏ.சி அல்லது என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 1-9-15-ந் தேதியில் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்கள் ரூ.125, கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள செலான் மூலமாக ஸ்டேட் வங்கியில் இந்த கட்டணத்தை செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர வழிகளில் கட்டணம் செலுத்த முடியாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, அத்துடன் கட்டண ரசீது மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து Sr.Deputy General Manager/HR(R-W), HRM Department, Bulding No.24, Bharat Heavy Electricals Limited, Tiruchirappalli 620014. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30-9-2015

நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : 7-10-2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் (உத்தேச) நாள்: 1-11-2015

விரிவான விவரங்களை http://careers.bhel.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment