FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, September 14, 2015

தபால் துறையில் தபால்காரர் பணி


இந்திய தபால் துறையில் தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய தபால்துறை மிகப்பழமையானது. நாடு முழுவதும் குக்கிராமங்கள் உள்பட எல்லா இடங் களிலும் ஏராளமான கிளைகளுடன் தபால் துறை செயல்பட்டு வருகிறது.

தற்போது தபால்துறை மற்றும் ரெயில்வே தபால் சேவை பிரிவுகளில் தபால்காரர்/மெயில் கார்டு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 143 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

கல்வித் தகுதி:

தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெயில்கார்டு பணிக்கு மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். முன்னாள் படைவீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.100-ம், தேர்வுக்கட்டணமாக ரூ.400-ம் சேர்த்து மொத்தம் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை தபால் அலுவலகங்களிலோ, மின்னணு முறையிலோ செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் தபால் பிரிவின் தபால்காரர் பணி அல்லது ரெயில்வே மெயில்கார்டு பணி இரண்டில் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். 10-ம் வகுப்பு சான்றிதழ் எண் தகவலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால் அதையும் தயாராக வைத்துக் கொள்ளவும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:


இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 4-10-15

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 7-10-15

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.dopchennai.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:

Post a Comment