FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, September 14, 2015

அழகப்பா பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் பள்ளி

 
12.09.2015, காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி துவக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் பி.எட்., எம்.எட்., சிறப்பு கல்வி பாட பிரிவு துவக்கப்பட்டதை அடுத்து, மாற்றுதிறன் குழந்தைக்கான பல்வேறு கல்வி உபகரணம் தயாரிக்கும் மையம் செயல்படுத்தப்படுகிறது. கற்றல் கற்பித்தல் உபகரணமான கேட்கும் புத்தகங்கள், பிரெய்லி பாட புத்தகங்கள், தொடுஉணர்ச்சி மூலம் கற்கும் உபகரணங்கள் தயாரிக்கிறது. தற்போது மாற்றுதிறனாளி சிறப்பு பள்ளி பி.எட்., கல்லூரியில் துவக்கியுள்ளனர். இங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு, திறனை கண்டறிந்து அடிப்படை கல்வி, தொழிற்கல்வி வழங்கப்பட உள்ளது. கண் பார்வை உள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், பேச்சு பயிற்சி மென்பொருள் உபகரணம் உள்ளது, என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்தார். தகவலுக்கு ஒருங்கிணைப்பாளரை 98949 60171ல் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment