02.07.2018
இந்துார் : பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண் கீதாவுக்கு திருமணம் செய்ய நடந்த சுயம்வரத்தில், இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோரை பிரிந்து, 9வது வயதில், ரயில் ஏறி, பாகிஸ்தான் நாட்டின் லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, அங்குள்ள தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்தார். அந்த சிறுமிக்கு, கீதா என, பெயரிட்டார்.
மத்திய அரசின் நடவடிக்கையால், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பிய கீதா, வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், தன் பெற்றோரை தேடி வருகிறார். தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில், ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.
பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார். இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கீதாவை திருமணம் செய்ய, விருப்பம் தெரிவித்தவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்தது. இந்த, 25 பேரும், கீதாவை சந்திக்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த, தலா ஒருவரை, கீதா தேர்ந்தெடுத்தார்.
இந்நிலையில், கீதா மனநிலை மற்றும் உளவியல் ரீதியாக சரியான பின், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என, அவரது பாதுகாவலரான ஞானேந்திர புரோஹித் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த இரண்டு பேரில், யாரையாவது ஒருவரை, கீதா, தேர்வு செய்வதற்காக, மீண்டும் சுயம்வரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment