FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, July 20, 2018

பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக தகவல்

19.07.2018, சென்னை: அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலாமாகியுள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. மிகவும் கொடுமையான முறையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் அடைப்பு

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் நாள் தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிர்ச்சியில் போலீசார் விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர். இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக சேர்ந்துள்ளார்.

பிரசவத்திற்கு பயன்படும் மருந்துகள் அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். முதுமையால் சந்தேகமில்லை தனது முதுமையால் யாருக்கும் தன் மீது சந்தேகம் வரவில்லை என்று கூறியுள்ள ரவிக்குமார் சிறுமியால் வாய் பேச முடியாது என்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரசவ நேரத்தில் பெண்களுக்கு கொடுக்கும் வலி மரப்பு மருந்தை கொடுத்து திட்டமிட்டு இந்த கொடுஞ் செயலில் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார் . அவரிடம் நடத்தப்படும் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

No comments:

Post a Comment