27.07.2018
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்த மனுஷி சில்லாரைப் போல் ஆசிய அளவிலான அழகி போட்டியில் வாகை சூடிய தேஷ்னா ஜெயின் என்ற இந்திய அழகி பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.மத்திய பிரதேச மாநிலம் டிகம் நகரை சேர்ந்தவர் தேஷ்னா ஜெயின். இவர் காதுகேளாதோருக்கான மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறார். பின்னர் தைவான் நாட்டில் 2016ம் ஆண்டு நடைபெற்ற காதுகேளாதோருக்கான 'மிஸ் இண்டர்நேஷனல்' போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.
இந்த வரிசையில், காதுகேளாதோருக்கான 'மிஸ் ஏசியா' பட்டம் பெற்று இந்தியாவுக்கு தற்போது பெருமை தேடி தந்துள்ளார்.
ஆனால் இவரது இத்தகைய சாதனை குறித்து யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர் புகழின் உச்சிக்கு சென்றார். எல்லா கேமரா கண்களும் அவரை படம் பிடித்தன. எல்லா மீடியாவும் அவரது பேட்டியை ஒளிபரப்பின.
ஆனால் காது கேளாதோர் பிரிவில் இந்தியா சார்பில் இரண்டுமுறை உலக அங்கீகாரம் பெற்ற தேஸ்னா ஜெயின் பற்றி சாதாரண செய்தி என்ற அளவில் தான் ஊடகங்கள் பேசின.
இந்நிலையில், காதுகேளாதோருக்கான மிஸ் ஏசியா பட்டம் வென்றது குறித்து பேசியிருக்கு தேஷ்னா,
20 நாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களுடன் பங்கேற்ற போது எனக்கு கூச்சமாக இருந்தது. அவர்கள் என்னை விட அழகாக இருந்தனர். என்னைவிட மிகவும் நேர்த்தியாகவும் உடையணிந்திருந்தனர். திறமையானவர்களாகவும் இருந்தனர்.
ஆனால் எனது பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளித்தது என்றார்.
No comments:
Post a Comment