FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, July 17, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்: காதுகேளாதோர் நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் மனு

16.07.2018, சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், ரே‌ஷன் கார்டு கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், காவல் துறை மனுக்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் தொடர்பான மனுக்கள் என 308 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கத்தின் சார்பில் கலெக்டர் லதாவிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமீபத்தில் மானாமதுரையில் ஓடும் ரெயிலில் வாய்பேச முடியாத, காதுகேளாத பெண்ணை கற்பழித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதேபோன்று திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களால் மாற்றுத்திறனாளிகள் தங்களை காப்பாற்றி கொள்வது என்பது கடினமாகிவிட்டது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நாட்டரசன்கோட்டையை சேர்ந்த செல்வம் கொடுத்த மனுவில், நாட்டரசன்கோட்டையில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றிலும் 15 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் நடைபெறும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளுக்கு சிவகங்கையில் இருந்து தான் போலீசார் வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நாட்டரசன்கோட்டையில் புதிதாக ஒரு போலீஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment