17.07.2018
சென்னை வளசரவாக்கத்தில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி இளைஞரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் ரங்கேஷ். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், போரூரில் உள்ள உணவகத்தில் பார்சல் கட்டித் தரும் வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.
வழக்கமாக உணவகத்தில் பணிமுடிந்து நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில்தான் ரங்கேஷ் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல், திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி தெரு வழியாக சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் ரங்கேஷின் கழுத்தில் மின் வயரால் இறுக்கி தாக்கியுள்ளனர். இதனால் அச்சத்தில் ரங்கேஷ் வாகனத்தை நிறுத்தியபோது 4 பேரும் அவரை சூழ்ந்துகொண்டு செல்போன், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
வாய் பேச முடியாத ரங்கேஷ், சைகை மூலம் அவர்களிடம் அழுது புலம்பியபோதும், துளியும் இரக்கமின்றி கொள்ளையர்கள் அவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 4 பேரும் முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி வந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக ரங்கேஷ் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment