FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, July 12, 2018

சிவகங்கை அருகே வாய்பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பெயின்டர் கைது


11.07.2018
சிவகங்கை திருப்புத்தூர் அருகே வாய் பேச முடியாத சிறுமியை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 27 வயதான பெயின்டர் கைது செய்யப்பட்டார். 

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரை அடுத்த அச்சரம்பட்டியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. வாய் பேச முடியாதவர். இவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள் ஆவர். 

நேற்று முன்தினம் இவரது தந்தையும், தாயும் வெளியில் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்தார்.

மேலாடையின்றி கிடந்த சிறுமி 
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் நேற்று முன்தினம் மதியம் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றார். அப்போது சிறுமி, ரத்த காயங்களுடன் மேலாடை இல்லாமல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீசாருக்கு தகவல் 
இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு வந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

3 தனிப்படைகள் 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

பெயின்டர் மாணிக்கம் 
தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் மாணிக்கம் என்ற 27 வயதான நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஒப்புக்கொண்ட பெயின்டர் 
போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

பலாத்காரம் செய்ய முயற்சி 
இதுகுறித்து மாணிக்கம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த அந்த வாய் பேசமுடியாத சிறுமியை மாணிக்கம் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

தோட்டத்தில் வைத்து பலாத்காரம் 
இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து விடுவார்களோ என்று அச்சமடைந்த மாணிக்கம் ஆசைக்கு இணங்காத சிறுமியை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த தலையில் தாக்கியுள்ளார். பின் அவரை தோட்ட பகுதிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment