FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 23, 2018

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பேரணி


23, 2018
சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி காமக்கொடூரர்களால் சிதைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும் தமிழ்நாடு ஆண்-பெண் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் நல சங்கம் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் அம்புரோஸ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர்கள் விவேக் மேத்யூ, டேராகனி, சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் பாந்தியன் சாலையில் நிறைவடைந்தது. பேரணியின்போது ‘இந்த மண்ணில் வாழ்வதற்கு வெட்கப்படுகிறோம்’ உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாற்றுத்திறனாளிகள் ஏந்தி சென்றனர்.

பேரணி குறித்து சைகை மொழி பெயர்ப்பாளர் வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த துயரம் கொடுமையிலும் கொடுமையானது. அந்த சிறுமிக்கு என்றைக்கும் எங்கள் ஆதரவு உண்டு. ஒன்றும் அறியாத சிறுமியை பல மாதங்களாக சிதைத்து வந்த குற்றவாளிகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கு தண்டனையும், அதன்மூலம் அந்த சிறுமிக்கு நீதியும் கிடைக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் அடுத்தடுத்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதற்கு இந்த கண்டன பேரணி ஒரு தொடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment