FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, July 14, 2018

அப்பொழுதே "மைனரை" கட் செய்திருந்தால், பாலியல் வல்லுறவு, கொலை நடந்திருக்காது!!!

13.07.2018
மூன்று வருடங்களாக வக்கிர புத்தி கொண்ட ஊர் மைனர் ஒருவன் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட, "அபராதத்தை" மட்டும் விதித்து அவனைத் தப்பிக்க விட்டிருக்கின்றது ஆலமரத்து பஞ்சாயத்து. அப்பொழுதே அந்த "மைனரை" கட் செய்திருந்தால் இப்பொழுது வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமியை பாலியல் வல்லுறவாகி உயிரை இழந்திருக்கமாட்டாளே.!" என வாய்மூடி மௌனியாக சோகத்தில் இருக்கின்றது சிவகங்கை மாவட்டம் கீழசேவல்பட்டி அருகிலுள்ள அச்சரம்பட்டி கிராமம்.

செவ்வாய்க்கிழமையன்று நண்பகல் 1 மணி வேளையில், அக்கம் பக்கத்தார் குரல் கொடுக்க அரைகுறை நிர்வாணத்துடன், தலையிலிருந்து ரத்தம் ஓடி நின்ற நிலையில் குளிக்க சென்ற புதர் மறைவிலேயே பிணமாக கிடந்திருக்கின்றார் வாய் பேசமுடியாத 17 வயது சிறுமியான அழகுதேவி.

நூறு நாள் வேலைக்கு சென்ற அம்மா கருப்பாயிக்கும், விவசாய கூலிக்கு சென்ற அழகுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல், உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுர சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்டக் காவல்துறைக் சுண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வினை நடத்த, டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.

சிறிது நேரத்தில் மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட கொலையாளி அருகிலுள்ள "மைனர்" மாணிக்கமே என உறுதி செய்யப்பட்டான். சரியாக இரவு 11 மணிக்கு கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே, கொலையாளியிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கி அவனை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

"சம்பவத்தினத்தன்று காலையிலேயே அழகாபுரி ஊருக்கு சென்று மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது இந்த சிறுமி குளிப்பதற்காக செல்ல, மதுபோதையில் இருந்த நான் அவரை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கிவிட்டேன். அலங்கோல ஆடைகளுடன் இருந்த அவர் எப்படியும் என்னை அடையாளம் காட்டிவிடுவார் என எண்ணி அருகிலிருந்த இரும்புக் கம்பிக் கொண்டு தலையில் அடித்துக் கொன்று விட்டேன்." என ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கிய கொலையாளி "மைனர்" மாணிக்கத்திற்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் முன்பு இதே கிராமத்தில் இது போல் பாலியல் சீண்டல் செய்ய, ஊரில் பெரிய குடும்பம் என்பதால் ஆலமரத்து பஞ்சாயத்து அபராதம் மட்டும் "மைனரை" தப்பிக்கவிட்டது. "தப்பு செய்தான். அது தான் "மைனரை" சுட்டுட்டேன்." என திரைப்படத்தில் நடிகர் விவேக் செய்தது போல் அப்பொழுதே போலீஸிடம் இவனை ஒப்படைத்திருந்தால் அந்த சிறுமிக்கு இந்த நிலை வந்திருக்காது.!

No comments:

Post a Comment