27.07.2018
சென்னை: செவித்திறன் பாதித்த சிறுமியை கடந்த 7 மாதங்களாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் பலாத்காரம் செய்தது எப்படி என்று 17 பேரிடமும் போலீசார் விடியவிடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, 7 மாதங்களாக போதை மாத்திரை, மயக்க ஊசிகளை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக புகார் எழுந்தது. போலீசார் இதுதொடர்பாக 17 பேரை கைது செய்தனர்.பின்னர் பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமி, குற்றவாளிகள் 17 பேரையும் கடந்த புதன் கிழமை புழல் சிறைக்குள் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.அதைதொடர்ந்து, குற்றவாளிகள் 17 ேபரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அயனாவரம் மகளிர் போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 7 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, போலீசார் 17 பேரையும் நேற்று முன்தினம் காவலில் எடுத்து வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களாக எப்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தீர்கள். சம்பவம் குறித்து சிறுமியின் ெபற்றோருக்கு தெரியுமா, தெரியாதா என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்துப் பூர்வமாகவும் போலீசார் பதிவு செய்தனர். மேலும், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமாரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய 6 ேபர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment