FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 5, 2018

1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

04.12.2018, திருச்சி,
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் 1,450 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.

இதில் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 50 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட 217 பேருக்கு நவீன காதொலி கருவிகள், கால்கள் துண்டிக்கப்பட்ட 10 பேருக்கு செயற்கை கால்கள், 2 கால்களும் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், பார்வையற்ற 8 பேருக்கு பிரெய்லி கைக்கெடிகாரம் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்ய வங்கி கடன் உதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சம்சாத் பேகம், மாவட்ட விளையாட்டு அதிகாரி புண்ணியமூர்த்தி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக விழா நடைபெற்ற இடத்தில் மாற்றுத்திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று மாலை திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 2,006 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment