FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, December 23, 2018

அறுவை சிகிச்சை மூலம் குறையை நீக்க 2 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ.6½ லட்சம் நிதியுதவி - திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிந்துரை

22.12.2018, திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா காளிபாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சிதா என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்களுக்கு ஹரி கீர்த்தனா(வயது 2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத நிலையில் உள்ளது. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரபு முடிவு செய்தார். அதன்படி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் அவர்களுக்கு ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து பிரபு, தனக்கு ரேஷன் கார்டு கேட்டு அவினாசி வட்ட வழங்கல் அதிகாரி ராகவியிடம் விண்ணப்பித்தார். அதன்பின்னர் கடந்த 17-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பிரபு-ரஞ்சிதா ஆகியோர் தனது குழந்தையுடன் வந்து கலெக்டரை சந்தித்தனர். தங்களின் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் குறைகளை நீக்குவதற்கு அரசின் நிதியுதவி கேட்டு விண்ணப்பம் செய்தனர். இதைக்கேட்டறிந்த கலெக்டர், சிறுமி ஹரி கீர்த்தனாவுக்கு ஆதார் எண் பெறப்பட்டு சிறுமியின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வழங்கல் துறை மூலமாக பிரபுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் பட்டது. மேலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.6½ லட்சம் நிதியுதவி வழங்க கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரை செய்தார். இதற்கு பிரபு நன்றி தெரிவித்தார். அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு காது கேட்பதுடன் வாய் பேசவும் வாய்ப்பாக அமையும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், மருத்துவ காப்பீட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment