10.12.2018
சேலம்: சேலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம், நேற்று நடந்தது. இதை, தமிழ்நாடு கேட்பியல் மற்றும் பேச்சுத்திறன் நிபுணர் சங்கம், செயல்வழி பயிற்சி நிபுணர் சங்கம் இணைந்து நடத்தின. நிபுணர் வாசுகி தலைமையில் குழுவினர், ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்தனர். காது கேளாமை, அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், கவனச்சிதறல், அதிக துறுதுறு, கற்றல், எழுதுதல் குறைபாடு, திக்குவாய், குரல்வளம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடு கண்டறிய, பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 50 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களில், காது கேளாதோர், மனநலம் குன்றிய குறைபாடு உள்ளவர்கள், அதிகளவில் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு, மூன்றுநாள் இலவச சிறப்பு பயிற்சி நடக்கிறது. தகவலுக்கு, 99449 - 71775 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.
No comments:
Post a Comment