FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, December 10, 2018

சாதனைக்கு ஏது தடை...


10.12.2018
சாதனையாளர்கள் வாழ்வதும், வீழ்வதும், காலத்தின் கையில் என்பது, மிகையல்ல. சாதனையாளர்களுக்கான அங்கீகாரம் என்பது, போட்டி நிறைந்த உலகில், அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. அதுவும், மாற்றுத்திறனாளி ஒருவர் சாதித்து விட்டால், அவரை கொண்டாடுவதில் கூட, இந்த சமுதாயம், ஓர வஞ்சனை காட்டுகிறது.அந்த வரிசையில், செவித்திறன் இழந்தும், தேசிய கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் புரிந்து, திரும்பியிருக்கிற சாய் ஆகாஷ் என்ற வீரரின் நிலை இருக்கிறது.ஹரியானா மாநிலம், குர்கானில், பி.சி.சி.ஐ., தேசிய காதுகோளாதோர் அசோசியேஷன் மற்றும் மாநில காதுகேளாதோர் கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, இன்டர்நேஷனல் டி - 20 கிரிக்கெட் போட்டியை, நவ., 19 -, 30 வரை நடத்தின; பல நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இந்திய அணியில், சென்னை சேர்ந்த சாய்ஆகாஷ், கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீப் ஆகிய, இருவர் இடம் பிடித்தனர். நிதி நெருக்கடியால், நாகையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு வாய்ப்பு பறிபோனது. இதில், சாய் ஆகாஷின் திறமை, அவை ஒரு மாற்றுத்திறன் படைத்தவர் என்பதை நிரூபித்தது.அவர், ஆஸி., அணிக்கு எதிராக அரைசதம், (54 ரன்), பாக்., அணிக்கு எதிராக, 28 ரன், வங்கதேசத்துடன், 32 ரன், இங்கிலாந்துடன், 16 ரன் எடுத்தார். இலங்கையுடனான இறுதிபோட்டியில், இலக் கை விரட்டிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து 'பெவிலியன்' திரும்ப, சாய் ஆகாஷ், நிலைத்து நின்று, 48 ரன் எடுத்தார்; இருப்பினும், இந்திய அணி தோல்வியடைந்தது.சாய் ஆகாஷ், தான் பங்கேற்ற, எட்டு போட்டியில், 6 சிக்சர், 14 பவுண்டரி, ஒரு அரைசதம் எடுத்து, 178 ரன் எடுத்து, இந்திய அணியின் 'டாப்' ஸ்கோர் பட்டியலில், முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் அசோசியேஷன், அணியின் பாராட்டு பெற்ற இவருக்கு, மாநில அரசின் சார்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்த விரும்புவோர், அவரது பயிற்சியாளரை, 98947 25497 என்ற எண்ணில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment