14.12.2018
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தபட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மேலும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கால்கள் பாதிக்கப்பட்டு 2 கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள், பணிபுரிவோர், சுயதொழில் புரிவோர் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுநாள் வரை இத்துறையின் மூலம் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் பேச்சு திறனற்ற நபர்கள் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் வருமான வரம்பு இல்லை. மேலும் மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதுநாள் வரை அரசு துறைகளின் மூலம் தையல் எந்திரம் பெறாதவராக இருக்க வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தபட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற கல்வி பயிலும் சான்று, பணிபுரிவோர், சுயதொழில் புரிவோர் என்பதற்கான சான்று, தையல் எந்திரம் பெற தையல் பயிற்சி பயின்றமைக்கான சான்று மற்றும் கல்வி மாற்றுச்சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment