FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, December 5, 2018

மாற்றுத்திறனாளிகள் அரசு சலுகைகளை பெறுவது எப்படி?


அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும். மேலும் இத்தகைய அடையாள அட்டைப் பதிவுதான் அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைத் தீட்டவும், சலுகைகள் அளிக்கவும் அடிப்படையாக அமைகிறது...


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணில் வாழ உரிமை உண்டு. அந்த வகையில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் குறைபாடு உள்ளவர்களும் மற்றவர்களைப் போல வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். அவர்களில் பலருக்கு அரசின் சலுகைகள், திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் தெரியவில்லை. அவைபற்றித் தெரிந்துகொண்டால் அவர்களது வாழ்வு சிறக்கும். அதே நேரத்தில் அவர்களை அடையாளம் கண்டு அவர்களது வாழ்வு மேம்பட பல்வேறு திட்டங்களை அரசு வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு சலுகைகளையும் அளித்து வரும் சூழலில் மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று அதைப் பகிர்ந்துகொள்வது ஏற்புடையதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாற்றுத்திறனாளி என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும். இதுவே ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைப் பெறுவதற்கான தேவைகளாகும். அதே வேளையில், மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப்படும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவது அவசியமே தவிர கட்டாயமில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும். மேலும் இத்தகைய அடையாள அட்டைப் பதிவுதான் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைத் தீட்டவும், சலுகைகள் அளிக்கவும் அடிப்படையாக அமைகிறது.

சான்றிதழ் எங்கெல்லாம்‌ உதவும்?

1) பள்ளியில் சேர.

2) தேர்வில் கூடுதல் நேரம் பெற.

3) 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொழித் தாளிலிருந்து விலக்குப் பெற.

4) பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டில் கட்டணச் சலுகை பெற.

5) வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற.

6) இன்னும் பல இடங்களில் சலுகை, முன்னுரிமை பெற.

அரசுத் திட்டங்கள் எவையெவை?

1) மாத உதவித் தொகை

2) இலவச நான்கு சக்கர வாகனங்கள்

3) காதுகேள் பொறி

4) நிதியுதவி

5) கண்பார்வையற்றோருக்கான உதவி உபகரணங்கள்.

ஒருவரது குறைபாட்டின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட இயலாமை குறித்து அரசு மருத்துவர் உறுதிசெய்த பிறகே சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையில் அவரது இயலாமை சதவிகிதம் குறிக்கப்பட்டிருக்கும். `ரைட்ஸ் ஆஃப் பேர்ஸன்ஸ் வித் டிஸ்ஸெபிலிட்டீஸ் ஆக்ட் 2016' (Rights of Persons with Disabilities Act, 2016), நடைமுறைக்கு வருவதற்கு‌முன்‌ ஏழு‌ வகைக் குறைபாடுகளே அரசால் அங்கீகரிக்கப்பட்டன. தற்போது ஆட்டிசம் உட்பட 21 வகைக் குறைபாடுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

அவைகுறித்து பார்ப்போம்.

* பார்வை இழப்பு

* பார்வைக் குறைபாடு

* குணமடைந்த தொழுநோய்

* செவித்திறனற்றோர், செவித்திறன் குறைபாடு.

* கை கால் பாதிப்பு/ விபத்தால் இழப்பு

* உடல்வளர்ச்சி குன்றிய நிலை

* மூளை வளர்ச்சிக் குறைபாடு.

* மனநோய் (Mental illness)

* ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder)

* பெருமூளை வாதம்

* தசை அழிவு

* நீண்டநாள் நரம்பு மண்டலப் பாதிப்பு

* குறிப்பிட்ட கற்றல் குறைபாடு

* பேச்சு மற்றும் மொழித் திறம் குறைபாடு

* ரத்த அழிவுச்சோகை (தலசீமியா)

* ரத்தம் உறையாமை (ஹீமோஃபீலியா)

* ஸிக்கிள்‌ செல் அனீமியா (Sickle cell anemia)

* செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உட்பட இரண்டு அல்லது மூன்று குறைபாடுகள் சேர்ந்துள்ள நிலை

* அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்.

* நடுக்குவாதம் (பார்க்கின்சன்)

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென அடையாள அட்டை மற்றும் சான்றிதழைப் பெறுவது பல்வேறுவகையில் நன்மை தரும். மேற்கூறிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைப்பெற அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளை அணுகி தேவையான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் எல்லா மாவட்டத்திலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சான்றிதழ் மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். இந்த சேவை சென்னை கே.கே நகரில் உள்ள மாநில வள ஆதாரப் பயிற்சி மையத்தில் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் பயிற்றுநர் மற்றும் தொடர்பாளர் ஷீபா நம்மிடம் பேசினார்.

``மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெற சென்னை கே.கே நகரில் உள்ள எங்களது மாநில வள ஆதாரப் பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களது குறைபாடுகளுக்கேற்ப அதற்கெனக் குறிப்பிட்ட நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை, செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முழுமையாகப் பார்வைத்திறன் இழந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் கை மற்றும் கால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் கைகளை இழந்தவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குள்ள மனிதர்கள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோய் குணமடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வெள்ளிக்கிழமை - மனவளர்ச்சி குன்றியவர்கள், `ஆட்டிசம்' பாதிப்பு உள்ளவர்கள், புற உலகச் சிந்தனையில்லாதவர்கள், குறிப்பிட்ட கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில், அந்தந்தக் குறைபாடுகளை உறுதிசெய்ய அரசு மருத்துவர்கள், இந்த மையத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவரது குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம் அரசு மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். அதன்பிறகு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

அடையாள அட்டை பெற சில ஆவணங்கள் தேவைப்படும். அவை என்னென்னவென்று பார்ப்போம். குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட மார்பளவுப் புகைப்படம், மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும் சிகிச்சை சான்றிதழ்கள் போன்றவையாகும்.

எங்களது மையத்தில், பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் துணையுடன் சிறப்புக் கல்வி, தொழில் பயிற்சிகள், நடத்தைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றுடன் தொடக்க நிலையிலேயே குறைபாடுகளைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பது எனப்படும் ஏர்லி ஐடென்டிஃபிகேசன் (Early identification) மற்றும் ஏர்லி இன்ட்டர்வென்சன் (Early intervention) சேவையும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, எங்களது மாநில வள ஆதாரப் பயிற்சி மையம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவகர்லால் நேரு இன்னர் ரிங்க் ரோடு, கே.கே. நகர், சென்னை - 600 078, தொலைபேசி எண்: 044-24719942

‌* சென்னை: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முகவரி சென்னை -ஃபாரஸ்ட் ஆபீஸ் பில்டிங், டி.எம்.எஸ். காம்பவுண்டு, சென்னை - 600 006 தொலைபேசி எண் 044-24315758

* காஞ்சிபுரம்: ஜிஎஸ்டிரோடு (கோர்ட் அருகில்), காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு - 603 001 தொலைபேசி எண் - 044 27431853

* திருவள்ளூர்: மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், திருவள்ளூர், தொலைபேசி எண் - 044-27662985

* வேலூர்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்டப் பஞ்சாயத்து அலுவலக வளாகம், பெருமாள்சாமி கட்டடம் (தரைத்தளம்), வேலூர்.தொலைபேசி எண்- 0416 2222737

* திருவண்ணாமலை: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தரைத் தளம், கலெக்டர் நகர், திருவண்ணாமலை - 606 604, தொலைபேசி எண்: 04165 294635

* கடலூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 37 - ராமதாஸ் சாலை, புதுப்பாளையம், கடலூர் - 607 001, தொலைபேசி எண்: 04142 294415

* விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம், தொலைபேசி எண்: 04146 225543

* சேலம்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 146 - வெங்கடேசபுரம் விரிவு, குமாரசாமி பட்டி, சேலம் - 637 003, தொலைபேசி எண்: 04286 280019

* ஈரோடு: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம், ஈரோடு - 638 001, தொலைபேசி எண்: 0424 2258986

* கோயம்புத்தூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் - 641 018,தொலைபேசி எண்: 0422 2380382

* தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,எம்.சி. ரோடு (மேம்பாலம் அருகில்) தஞ்சாவூர் - 613 001, தொலைபேசி எண்: 04362 236791

* நாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (தரைத்தளம்), பால்பண்ணைச்சேரி (தெற்கு), நாகப்பட்டினம் - 611 002, தொலைபேசி எண்: 04365 253041

* திருச்சி: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 1/1 பிளாக் 1 ,வார்டு J, மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், துணை கணக்காயர் அலுவலகம் அருகில், கன்டோன்மென்ட், திருச்சி - 620 001, தொலைபேசி எண்: 0431 2412590

* மதுரை: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சுப்ரமணியபுரம், வில்லாபுரம் அஞ்சல், மதுரை - 625 011, தொலைபேசி எண்: 0452 2679695

இவைதவிர திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய முகவரிகளில் அவரவர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். இது தவிர மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் மையத்தையும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறியலாம்.

தொலைபேசி எண்: 044-24719942, 24719943

இலவச தொலைபேசி எண்:18004250111

No comments:

Post a Comment