FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 5, 2018

69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


காஞ்சீபுரம், டிச. 5-–
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி, 69 பயனாளிகளுக்கு ரூ.15,51,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு பேசுகையில், இங்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு அவர்களது திறமை வெளிகாட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் உள்ளத்தில் ஊனமின்றி அவர்கள் உற்சாகத்தோடு வேகமாக சாதாரண மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை ரூ.68 ஆயிரம், நான்கு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஒரு நபருக்கு ரூ.1000 காசோலையாகவும் மாவட்ட கலெக்டர் வழங்கி சிறப்பித்தார்.

2018–19 ஆம் ஆண்டிற்கான வங்கி கடன் மானியமாக 10 நபர்களுக்கு கறவைமாடு, துணி வியாபாரம், பெட்டிக்கடை, இட்லி கடை, உள்ளிட்ட தொழில் தொடங்க ரூபாய் 1 லட்சமும், 8 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கினார். 8 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் நவீன செயற்கை அவயங்கள் 8 நபர்களுக்கு ரூ.90,100க்கும் வழங்கப்பட்டது. 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் (ஒன்றின் மதிப்பு ரூ.7240) ரூ.72,400 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் கால்கள் செயலிழந்த நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு ரூ.5,910- வீதம் சக்கர நாற்காலி மொத்தம் ரூ.59,100 மதிப்பில் வழங்கப்பட்டது.

மொத்தம் ரூ.24,600 மதிப்பில் 10 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காது பின்புறம் அணியும் 3 நவீன கருவிகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட சமூக நல அதிகாரி சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஸ்ரீநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment