FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 1, 2025

தாம்பரத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்.. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை கொன்றது யார்?



31.12.2024 
சென்னை:
தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு புத்தூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட அங்குள்ள குடோன் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்தபோது, இறந்து கிடந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டு, உடல் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கை, கால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் அந்த நபரின் கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்களும் இருந்துள்ளன.

இதையடுத்து சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்பநாய் ஸ்குவாட்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குனர் பவானி ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாய் பேச முடியாதவர்

மேலும், போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது, இறந்து கிடந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா (21) என்பது தெரிய வந்தது. இவர் எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும், சூர்யா பிறவிலேயே காது கேட்கும் திறனற்றவர் மற்றும் வாய் பேச முடியாதவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், இவர் கடந்த 13 ஆண்டுகளாக சேலையூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், இதற்கு முன்பு சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா வீட்டிற்கு திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரமா

இதையடுத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூர்யாவை யார் கழுத்தறுத்து கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்? ஏதாவது காதல் விவகாரமா போன்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தில் ஆட்டோ வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்ததால் அது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் சேலையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment