திருச்சி 30.12.2024
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மத்திய செயற்குழு கூட்டம் துவாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் முல்லைவளவன் தலைமை வகித்தார். இதில், மாதாந்திர பயணப்படி விண்ணப்பித்து பல மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நீண்டநாள்களாகக் காத்திருக்கின்றனர்.
இவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதாந்திர பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்புப் பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment