FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 2, 2025

தாம்பரம் மாற்றுத்திறனாளி படுகொலை வழக்கு - கைதானவர்கள் போலீஸிடம் சொன்ன காரணம் என்ன?


கைது செய்யப்பட்ட நபர்கள் 

02.01.2025
சேலையூர் அருகே கை, கால்களைக் கட்டி, கழுத்தறுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சூர்யாவின் கொலை வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: தாம்பரம் அருகே மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரை சேலையூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், இந்த கொலையில் வேறு எதாவது உள்நோக்கம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோடு மப்பேடு புத்தூர் கிராமம் அருகே அலங்கார் கட்டட அடுக்குமாடி குடோன் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடப்பதாக, அந்த குடோனின் காவலாளி தேவராஜன் என்பவர் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை:

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஆய்வு செய்தபோது இறந்து கிடந்த ஆண் நபர் மீது பிளாஸ்டிக் கவர் போடப்பட்டு, ஆரஞ்ச் கலர் துணியால் கட்டப்பட்டு, அவர் மேல் கூழாங்கல், கிரஷர் மணல் போடப்பட்டிருந்ததும், மேலும் இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு, கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளதும் தெரியவந்தது.
அதனையடுத்து, சேலையூர் போலீசார் சென்னை பரங்கிமலையில் உள்ள போலீஸ் மோப்பநாய் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டைசன் என்ற மோப்பநாய் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. மோப்ப நாய் இறந்து கிடந்த நபரின் உடலை மோப்பம் பிடித்து விட்டு மேற்கு பகுதி நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று திரும்பி வந்துவிட்டது.

கொலை வழக்கில் மூவர் கைது:

பின்னர், தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குநர் பவானி, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், இறந்த நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் சேலையூர் இந்திரா நகர் பகுதியைச் சூர்யா (21) எனவும், எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வந்தவர் இவர் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சேலையூர் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலையூர் அகரம் தென் பகுதியைச் சேர்ந்த சபரி கணேசன்(25), சேலையூரைச் சேர்ந்த ஐயப்பன்(26), குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த விஜய பிரதாப்(23) ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்துள்ளனர்.

கொலைக்கு என்ன காரணம்?

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யா மதுபோதையில் அவர்களிடம் தகராறு செய்ததாகவும், அதனால் சூர்யாவை அவர்கள் மூவரும் ஆட்டோவில் குரோம்பேட்டையில் உள்ள விஜய் பிரதாப் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அடித்து உதைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பின்னர் மப்பேடு பகுதியில் சாலையோரம் வீசி சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தற்போது, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, அரிவாள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ள போலீசார், மூன்று பேரிடமும் இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment