10.01.2025 சென்னை: அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மாற்றத் திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், என்று பேரவையில் எழிலன் எம்எல்ஏ பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் எழிலன் (திமுக) பேசியதாவது: காலம் காலமாக 15, 16, 20 ஆண்டுகளாக நம் மாற்றுத்திறனாளிகள் அரசாங்க வேலைவாய்ப்பில் ஒப்பந்த அடிப்படையில் உள்ளார்கள்.
அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை வலுவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக தேர்வாணையத்தின் மூலமாக அவர்களை பணியில் எடுக்கவேண்டுமென்ற ஒரு அடிப்படை முறை இருக்கிறது. தேர்வாணையத்தின் மூலம் எளிதாக அந்த மாற்றத் திறனாளிகளை நிரந்தர வேலைகளில் சேர்ப்பதற்கான வழி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் முதல்வர் பிறந்த நாளை மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment