10.01.2025 விருதுநகர்: விருதுநகரில் காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
விருதுநகர் அருகே சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காது கேளாத, வாய் பேச முடியாத சுமார் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்தார்.
பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதோடு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
No comments:
Post a Comment