FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, January 24, 2025

மாற்றுத் திறனாளிகளை என் படங்களில் காட்ட இதான் காரணம் – இயக்குநர் பாலா விளக்கம்



மாற்றுத் திறனாளிகளை தன் படங்களில் காட்சிபடுத்துவதற்கான காரணத்தை இயக்குநர் பாலா பகிர்ந்துள்ளார்.

20.01.2025 பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின் , சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். அப்போது இயக்குநர் பாலாவிடம் மாற்றுத் திறனாளிகளை உங்கள் படத்தில் அதிகம் காட்சிப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாலா, “அவர்களின் உலகத்தைக் காண்பிக்க வேண்டும். சும்மா அவர்களைப் பார்த்துவிட்டு அய்யய்யோ ஏன் இப்படி இருக்கிறார்கள் என ஒதுங்கிப் போகக் கூடாது. நம்மிடையே தான் அவர்களும் வாழ்கிறார்கள். நம்மை நம்பிதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களைக் காண்பிக்க வேண்டியது நம்முடைய கடமை” என்று கூறினார்.



No comments:

Post a Comment